மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

“கவிஞருக்கு கல்யாணம்” ஜூன் 29, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 12:23 பிற்பகல்

இனி
நாட்குறிப்புகளை சீண்ட நேரமிருக்காது;
நடந்தவற்றை சொல்ல தோழி வந்த பின்னே !!!

செல்பேசிக்கு செலவே இருக்காது;
விழியாலேயே பேச வஞ்சி வந்தாயிற்றே !!!

விளக்கெரித்து விலகாது இரவு;
அறைக்குள்ளேயே  அமர்ந்திருக்கிறதே  நிலவு !!!

கவிதைக்கும் நேரம் இருக்குமோ தெரியாது;
கவிதையே துணையாய் இருக்கும் பொழுது ??!!!

கோடி கோடி வாழ்த்துக்களுடன்
- பிரேம்குமார்

 

“காதல் கிறுக்கல்கள்” ஜூன் 29, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 8:59 மு.பகல்

காதல் அரும்புகையில் கண்களால்
கொஞ்சம் மலர்ந்ததும் உன் வார்த்தைகளால்
சீண்டும் பொழுது உன் விரல்களால்
சிற்சில நேரங்களில் உதடுகளால்
உன் எத்தனையோ பதிவுகள்
காதல் கிறுக்கல்களாய்
என்னுள் !!!

 

“நீ” ஜூன் 28, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 7:03 மு.பகல்

உன்னோடு மட்டுமே
பேசி
பழகிவிட்டது
எனக்கு;

நீ இல்லாத பொழுதுகளில்
காகிதங்களோடு
மட்டுமே
பேசி
கவிதை புனைகிறேன்!!!

 

“மழை” ஜூன் 28, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 6:54 மு.பகல்

மழை
வரும்
நாட்கள் எல்லாம்
வீதிகள்
வெறிச்சோடி போகின்றன

ஏனோ
என் மனம் மட்டும்
நம்மை நனைத்த
அந்த மழைத்துளிகளை
தேடிக்கொண்டு
வீதிவீதியாய் அலைகிறது !!!

- பிரேம்குமார்