உன்னால் கவிதை
படைக்கும்
நான் கவிஞனெனில்
உன்னை படைத்த
உன் பெற்றோரை
என்னவென்பதாம்??
என்னவென்பதாம்?? ஆகஸ்ட் 31, 2006
அறிவியல் விதி ஆகஸ்ட் 31, 2006
இது
நியூட்டனின் எத்தனாவது விதியென
கண்டறிய வேண்டும்;
எந்நிலையிலும்
நீ கடக்கும் வேளையில்
கண்கள் தாமாகவே
உனது பிம்பத்தை
நோக்கி நகும்.
சுற்றுலா ஆகஸ்ட் 9, 2006
இரண்டு மாதமாய்
திட்டமிட்டு,
‘இந்த வாரம் ஊருக்கு வரமாட்டாயா?’
செல்லச் சண்டையிட்ட அம்மாவிற்க்கு
சமாதானம் சொல்லி,
அலுவலகத்தில்
விடுமுறை போராட்டம்
ஒன்று செய்து;
சொகுசு ஊர்தியிலும்
சுகமில்லா நீண்ட பயணம்
செய்ததெல்லாம்,
என்றோ
உதறிவிட்டு வந்த
மலைகளையும் காடுகளையும்
காணத்தான் !
என்ன மாயமோ ??? ஆகஸ்ட் 9, 2006
எத்தனையோ காலமாய்
இதே வழியில்
பயணித்திருந்தாலும்
அந்த தெருமுனை
பெட்டிக்கடையும்
மந்தமாய் விளக்கெரியும்
மளிகைக்கடையும்
இப்போதுதான்
பளிச்செனப் புலப்படுகின்றன
உன் பெயரின்
மாயமாய்
இருக்குமோ?
மழை தருமோ மேகம் ?! ஆகஸ்ட் 9, 2006
நீ கூந்தல் துவட்ட,
என் மேல்
தெறித்த
நீர்த்துளிகள் தான்
உறுதி செய்தன
மழை மேகம் கருப்பென்பதை.
நீயில்லாமல்… ஆகஸ்ட் 9, 2006
பேருந்துக்கான
நீண்ட காத்திருப்பும்,
பெருங்கூட்டத்திலும்
உறுத்தும் தனிமையும்,
பக்கத்து இருக்கையின்
பரிச்சயமில்லா முகமும்,
நெடும் பயணத்தில்
நெருடும் அமைதியும்,
நீயில்லாத வெறுமையை
வெகுவாய் குத்திக்காட்டுகிறது.