மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

தீண்ட தீண்ட‌ செப்டம்பர் 15, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 3:59 மு.பகல்

உன் அருகாமையை
நினைத்து நினைத்தே
படபடக்கிறது,
உன் துப்பட்டாவும்
அது தீண்டி போன
என் மனமும்.

 

‘ம்’ செப்டம்பர் 15, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 3:53 மு.பகல்

ஆயிரம் க‌தைத்தாலும்
அந்த‌
‘ம்’ என்ற‌
முற்றுப்பெறாத‌
வார்த்தையில் தான்
முழுமை அடைகின்ற‌ன‌
நம்
தொலைபேசி உரையாட‌ல்க‌ள் !