மல்லியப்பூ முடியயில
மனசயும் முடிஞ்சுபுட்டே
சிக்கில்லா சடயோட
சிக்கிருச்சே மனசு
சீலயக் கட்டயிலே
சீவனயுங் கட்டிப்புட்டே
கலையாத சீலக்கட்டில்
கலையுதே மனசு
வளவி சிணுங்கயில
வயசும் சிணுங்குது
மாட்டுற வளவியூட
மாட்டுதே மனசு
சிக்குன மனச
சீராக்கி சேப்பியோ?
கலஞ்ச மனசோட
கலவரஞ் செய்வியோ?
மல்லுக்கு நிக்காம
சொல்லொன்னு சொல்லு
ஊரே கேக்க உரக்கவோ இல்ல
பக்கமா வந்து பய்யவோ.
தாத்தா..நல்லாயிருக்கு.. கிராமத்து ரசனையில் ஒரு புது முயற்சி..
மேலும் முயல்க.. வாழ்க வளர்க!
நன்றி பேராண்டி.