சிண்டை பிய்த்துக்கொள்ளவைத்த
சிக்கலான புதிரின் விடை
சிக்கிவிட்ட சந்தோசம்
சுட்டெரித்தாலும்
முகத்திலரையும் சுத்தமான காற்று
வம்பலைகளை துரத்தும் காதோர
பண்பலை
மடியிலாடி காற்றிலாடி கருத்திலாடி
படபடக்கும் கவிதைத் தொகுப்பு
நாள் முடியும் வேலையிலும்
அக்கணந்தான் கூடுடைத்த பட்டாம்பூச்சிகளாய்
தெருவிலாடும் சிறார்கூட்டம்
அலுவல் சுமைகளின்
அலுப்பை காட்டாது
வாசலில் காத்திருக்கும் தாய்
புரண்டு படுத்தாலும் அருகில்வர
முரண்டு பிடிக்கும் தூக்கம்
அவசரமாய் எட்டிப்பார்க்கும்
அதீத சுகம்
ஏதோவொன்று மறக்கடித்துவிடும்
வீட்டிற்கு திரும்பும் வலிகொண்ட பிரயாணத்தை
ஒவ்வொரு நாளும்
அடடா.. தற்கால இயந்திர வாழ்வின் நிதர்சனம் நல்லதோர் கவிதை வடிவில்..
தாத்தா… களத்தில் குதித்து விட்டீர் போல! Battery fully recharged-ஆ? கலக்க்குங்கய்யா…..
நல்லாயிருக்கு பிரேம்!
//வம்பலைகளை துரத்தும் காதோர
பண்பலை//
//நாள் முடியும் வேலையிலும்
அக்கணந்தான் கூடுடைத்த பட்டாம்பூச்சிகளாய்
தெருவிலாடும் சிறார்கூட்டம்//
அழகு!
//அவசரமாய் எட்டிப்பார்க்கும்
அதீத சுகம்//
விளங்கவில்லையே?
வாய்யா வா! தினம் தினம் இங்கே மேலும் கீழும் சுமார் 3.5 மணி நேரம் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது… அதனால வந்தது தான் தலைவா இந்த கவிதை!
இந்த பேருந்து பயணத்தில் வரும் குட்டித்தூக்கம் இருக்கே…அடடா அடடா! அதப்பத்தி தான் சொல்ல வந்தேன்
)
oh.. up and down – மேலும் கீழும்! – அப்படியே மொழிபெயர்த்துட்டியே பரட்டை….
அனுபவி ராஜா அனுபவி.. இங்கே மட்டும் என்ன வாழுதாம்..
நாங்களும் டூ வீலர்ல 2 மணி நேரம் மேலும் கீழும் பயணம் செய்யுறோம்ல..
அட, நாமளும் ஒரு மொழிப்பெயர்ப்பாளர் ஆகலாமேன்னு ஒரு நப்பாசை தான். “முன்னும் பின்னும்” தான் சரியா இருக்கும் இல்லையா !!!
அது சரி.. புது முயற்சியா? கலக்குங்க..
முன்னும் பின்னும் – சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் பிரேம்…
வாழ்த்துக்கள்…
பிரேம்.. blogspot block ஆனதால wordpress-la புதுசா இப்ப ஒரு வலைப்பூ ஆரம்பிச்சிருக்கேன்.. (ஏற்கெனவே ஆரம்பிச்சதுதான் ஆனால் இப்பத்தான் தொடருகிறேன்..)
பாத்துட்டு சொல்லுங்க..
http://blogsofraghs.wordpress.com