மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

காத‌லென‌ப்ப‌டுவ‌து…. ஜூலை 17, 2007

கோப்பு வகை: கவிதை — பிரேம்குமார் சண்முகமணி @ 7:22 மு.பகல்

காதல் களவு;
கற்றதும் மறந்தது
மற்றவைய‌னைத்தும்!

காதல் விடம்;
அவ்விடத்தை முறிக்கும் விடம்
கிடைக்காமலேயே போகட்டும்.

காதல் ஆயுள் தண்டனை;
மிச்சமிருக்கும் சென்மங்களையும்
இப்போதே வாழ்ந்துவிடும்
ஏற்பாடுகள் உண்டா?

காதல் மாயை;
ரசிக்கும் மனமோ குழந்தை
ஆராய்ந்து பார்க்க ஏது வசதி?

 

2 Responses to “காத‌லென‌ப்ப‌டுவ‌து….”

  1. Raghavan Says:

    ம்ஹீம்.. இது நல்லாயிருக்கு பிரேம்.. வலைத்தளப் பின்புலமும் கூட..

    நம்முடைய வாழ்வில் ஏதாவதொரு தருணத்தில் நமக்குத் தேவப்படுவது “ஒரு சிறு மாற்றம்!”.

    கலக்குங்க… எப்படியிருக்கீங்க பிரேம்? வாழ்க்கைப் பயணம் எப்படிப் போகுது?

  2. மிக்க நன்றி ராகவன். வாழ்க்கை நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது? நீங்களும் நலமோடு வளமோடு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்


Leave a Reply