முதன்முதலாய் பார்த்துக்கொண்டது,
பரஸ்பரம் புன்னகைகள்
பறிமாறிக்கொண்டது,
அறிமுகத்தில் தொடங்கி
கதைகள் பேச ஆரம்பித்தது,
உன் அருகாமை இல்லாத
பொழுதுகளில் தவித்துப்போனது,
இவையெல்லாம் நடந்தேறிய
தேதிகளும் கிழமைகளும்
சத்தியமாய் நினைவில்லை,
நல்லவேளையாய் நட்பில்
அது தேவைப்படுவதுமில்லை!
இப்படிக்கு,
நட்பு
ஐயா..
இந்தக் கவிதையை நான் ஏற்கெனவே உங்களின் இதர வலைப்பூவில் முகர்ந்து விட்டேனே..
நன்று.. சால நன்று.. நட்பின் பெருமை போற்றுதல் மிகவும் நன்று…