அன்பார்ந்த பா.க.ச உறுப்பினர்களே,
இதுவரை நான் வலையுலக போட்டிகளில் கலந்துக்கொண்டதில்லை. ஆக, இது என் ‘தல’ முயற்சி. (அதாங்க, முதல் முயற்சி) எல்லோரும் உங்க ஆதரவு தர வேண்டுகிறேன்
சங்கம் கொண்ட பெருந்’தல’
*****************
’தல’ என்றால் நீ தான் பெருந்’தல’
அப்பட்டம் வேறார்க்கும் பொருந்’தல’
பலர் ’தல’ கருந்’தல’
சிலர் ’தல’ வெறுந்’தல’
உனக்கு மட்டுமே
வட்டமாக ’தல’
பட்டமாக ’தல’
கலாய்ப்பதை நாங்க நிறுத்’தல’
புத்தி சொல்லியும் திருந்’தல’
உமக்கும் அதொன்றும் உறுத்’தல’
அதனால் பெருசா வருந்’தல’
என்னைக்கு வருமோ உமக்கு விடு’தல’
அதுவரைக்கும் கண்டுக்காம விடு ’தல’
யப்பா… முதல் பதிவே இவ்வளவு சூப்பரா இருக்கே!!
உங்களுக்கு பா.க.சவில் நல்ல எதிர்காலம் இருக்கு
தல,
கலக்கலா இருக்கே.. அது என்ன பா.க.ச்?
யாரும் உங்க கவிதையைப் படிச்சுட்டு,
“வேணும் விடுதல
இல்லாட்டி போ தறுதல”
ன்னு கேக்காம இருந்தா சரி!!
வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி செய்சங்கர். உங்கள போல் முன்னோடிகளின் ஆசீர்வாதம் இருந்தாலே போதும்
ராகவன்,
இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடும் போது மட்டும் ‘தல’ என்ற வார்த்தையை தவிர்த்திடுங்க…..
அப்புறம் பா.க.ச வினர் பொங்கி எழுந்துடுவாங்க…
பா.க.ச – பாலபாரதி கலாய்ப்போர் சங்கம்
ஆஹா.. பாவங்க அந்த பாலபாரதி.. மனுசனுக்கு கொஞ்சம் கூட ஓய்வே இல்லாம அவர தெளிய வச்சி, தெளிய வச்சி அடிக்கிறீங்களே.. நியாயமா..
இது தெரியாம நானும் கலந்துக்கிட்டேனே ;-(