பிறிதொரு நாளில் சேர்ந்தே படிக்கலாமென
பத்திரப்படுத்திய ஆட்டோகிராப் ஏட்டை
மெல்ல புரட்டுகிறேன் தனிமையில்
வழக்கமான வார்த்தைகளையும்
வாழ்த்துக்கவிதைகளையும் தாண்டி
புத்தகமெங்கும் இரைந்து
கிடக்கிறது நம் காதலின் நினைவுகள்
நம் பொருத்தத்தை பாராட்டும் தோழனின் மகிழ்வு
அடுத்த சந்திப்பிற்கான சந்தர்ப்பமாய்
நம் திருமணம் அமையுமென நம்பிய கனவுகள்;
அதற்கு வரமுடியுமோ என்ற சந்தேகத்தில் அப்போதே
அழத்தொடங்கிய தோழியின் புலம்பல்கள்……
காதலை காகிதத்தில் சொல்ல மறுத்துவிட்ட உன்னால்
பக்கவாத்தியங்கள் பலமாக இசைக்கயில்
பாடகி மட்டும் மௌனம் காக்கும் இசைக்கச்சேரியாய்
தானிருக்கிறது இந்த புத்தகம்
உணர்வுகளை எப்போதும் உரக்க சொன்னதில்லை நீ;
பிரியத்தின் போதும்,
பிரிவின் போதும்
-
பிரேம்குமார் சண்முகமணி
*** இந்தக் கவிதை தங்கம் மாத இதழின் செப்டம்பர் பதிப்பில் வெளியானது
“பக்கவாத்தியங்கள் பலமாக இசைக்கயில்
பாடகி மட்டும் மௌனம் காக்கும் இசைக்கச்சேரியாய்” நல்ல உவமை….
கவியெழுதும் ஒவ்வொருவரின் மனதிலும், கண்டறிய முடியா ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு அழுதுகொண்டுதான் இருக்கிறது, காதல்..
//உணர்வுகளை எப்போதும் உரக்க சொன்னதில்லை நீ;
பிரியத்தின் போதும்,
பிரிவின் போதும்//
உண்மை முற்றிலும் உண்மை
நல்லதொரு கவிதை பிரேம்.
வாழ்த்துக்கள்.
//காதலை காகிதத்தில் சொல்ல மறுத்துவிட்ட உன்னால்
பக்கவாத்தியங்கள் பலமாக இசைக்கயில்
பாடகி மட்டும் மௌனம் காக்கும் இசைக்கச்சேரியாய்
தானிருக்கிறது இந்த புத்தகம்
//
நல்ல உவமை!
தொடரட்டும் பயணம்…
Vazhtha vayathu mattumillai., enakku varthaigalum illai…
Nice one Prem… (Sorry, I do no have Tamil font utility)
//உணர்வுகளை எப்போதும் உரக்க சொன்னதில்லை நீ;
பிரியத்தின் போதும்,
பிரிவின் போதும்//
பெண்கள் எப்போதும் அப்பிடித்தான்….உணர்வுகளை உரக்கச் சொல்வதில்லை
அன்புடன் அருணா