மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

கொலு அக்டோபர் 18, 2007

கோப்பு வகை: கவிதை — பிரேம்குமார் சண்முகமணி @ 9:39 மு.பகல்

நித்தமும் என் மனதில்
கொலுவீற்றிருக்கும்
அம்மன் நீ!

கொலுப்பொம்மைகள் எல்லாம்
ஓய்யாரமாக வீற்றிருக்கின்றன படிகளில்;
வருபவர்களோ உன்னையே
பார்த்திருக்கிறார்கள்

கொலு வைத்தால்
அம்பிகை வீட்டிற்கு வருவாள்
என்று நம்புகிறாள் அம்மா!
நீ வந்துப்போனதில் இருந்து நானும்…

கொலுப்பார்க்க வந்த
உனைப்பார்த்த பிரமிப்பில்
உறைந்து நிற்கிறேன்;
எத்தனைப் பெரிய பொம்மை
என வியக்கிறது
வந்திருக்கும் குழுந்தை ஒன்று

 

3 Responses to “கொலு”

  1. Raghavan Says:

    பார்ராங்க‌.. என்ன‌டா கொஞ்ச‌ நாளா ஒண்ணுமே காணோமேன்னு பாத்தேன்.. க‌ல‌க்கிப்புட்டீக‌ அப்பு..

    க‌விதைக‌ளில் த‌பூ ச‌ங்க‌ர் நெடி அடிக்கிற‌தே! வாழ்த்துக்க‌ள் பிரேம்.

  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராகவன். அலுவலகப்பணி கொஞ்சம் அதிகம். அதான் அதிகம் எழுத முடிவதில்லை. இது ஒரு ‘நவராத்திரி’ சிறப்புப் பதிவு. அவ்வளவே :)

    //க‌விதைக‌ளில் த‌பூ ச‌ங்க‌ர் நெடி அடிக்கிற‌தே!//

    ம்ஹீம், இது தான், இதே தான். நான் எப்பவும் அந்த நெடி இருக்கக்கூடாது என்று கவனமாக இருப்பேன். ஆனால் இந்த முறை கொஞ்சம் சாயல் வந்துவிட்டது :( :)

  3. raghs Says:

    தப்பு ஒண்ணும் இல்ல பிரேம்..

    அந்த அளவுக்கு ஒருத்தரோட பாதிப்பு நம்ம மேல இருக்குங்கிறதுக்கு இதுக்கு மேல என்ன வேணும் சொல்லுங்க பார்ப்போம்?

    நடத்துங்க ஐயா…


Leave a Reply