மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

காத‌ல் கார்த்திகை டிசம்பர் 12, 2007

கோப்பு வகை: கவிதை — பிரேம்குமார் சண்முகமணி @ 12:06 பிற்பகல்

விண்மீன்க‌ளுக்கு ம‌த்தியில் நிலா;
தீப‌ங்க‌ளின் ந‌டுவில் நீ!
சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன‌
விளக்குகள்
நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக‌

உன் நினைவெனும் தீபத்தில்
விட்டிலாய் விழுந்து விழுந்து
முடிகின்றன என் மணித்துளிகள்
புத்தாடைய‌ணிந்த‌ பூரிப்பில்
நீ உல‌வும் அழ‌கைக் காண‌வேனும்
நாள்தோறும் வாராதா
ஏதேனும் ப‌ண்டிகை

 

Leave a Reply