மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

பா.க.ச ஆண்டு விழா போட்டி : என் ‘தல’ கவுஜ முயற்சி ஆகஸ்ட் 31, 2007

கோப்பு வகை: Uncategorized — பிரேம்குமார் சண்முகமணி @ 8:05 மு.பகல்

அன்பார்ந்த பா.க.ச உறுப்பினர்களே,

இதுவரை நான் வலையுலக போட்டிகளில்  கலந்துக்கொண்டதில்லை. ஆக, இது என் ‘தல’ முயற்சி. (அதாங்க, முதல் முயற்சி) எல்லோரும்  உங்க ஆதரவு தர வேண்டுகிறேன்

 சங்கம் கொண்ட பெருந்’தல’
***************** 

தல’ என்றால் நீ தான் பெருந்’தல
அப்பட்டம் வேறார்க்கும் பொருந்’தல

பலர் ’தல’ கருந்’தல
சிலர் ’தல’ வெறுந்’தல
உனக்கு மட்டுமே
வட்டமாக ’தல
பட்டமாக ’தல

கலாய்ப்பதை நாங்க நிறுத்’தல
புத்தி சொல்லியும் திருந்’தல
உமக்கும் அதொன்றும் உறுத்’தல
அதனால் பெருசா வருந்’தல

என்னைக்கு வருமோ உமக்கு விடு’தல
அதுவரைக்கும் கண்டுக்காம விடு ’தல
    

 

சென்னை 600028 மே 3, 2007

கோப்பு வகை: Uncategorized — பிரேம்குமார் சண்முகமணி @ 6:37 மு.பகல்

சென்னை 600028
எங்க ஏரியா, உள்ளே வராதே

வாழ்க்கையில் எப்போதாவது ஸ்டிக் கிரிக்கெட் விளையாடியிருந்தால் நிச்சயம் உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.

காதல், அடிதடி, குத்துவெட்டு, பஞ்ச் டயலாக், ரத்தம் என்ற தமிழ் திரைப்படங்களின் சராசரி எல்லையை மீறி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் ஒரு இளைஞர் கூட்டத்தை பற்றிய படம் தான் இது. இளைஞர்கள் பற்றிய படம் என்றாலும் ஏற்கனவே வந்த சில படங்கள் போல் ஆபாசம் இல்லை என்பது ஒரு ஆறுதலான் விசயம்
ரேடியோ மிர்ச்சி சிவா, ப்ரேம்ஜி, ‘பகவதி’ ஜெய், அர்விந்த் சித்தார்தா , இயக்குனர் அகத்தியனின் மகள் என சில தெரிந்த முகங்களும் சில புதுமுகங்களும் சேர்ந்து வாழ்ந்திருக்கும் படத்தில் தெருக் கிரிக்கெட் தான் கதைக்களம்

படத்தில் காட்சிகள் பெரும்பாலும் இயல்பாகவே இருக்கின்றன‌. நகைச்சுவைக்கூட மிக இயல்பாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது நினைத்தாலும் சிரிக்க‌ வைக்கும் ந‌கைச்சுவைக‌ள் நிறைய‌ உண்டு ப‌ட‌த்தில்.

பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பிரபலம் ஆகிவிட்டவை. அருமையாக படம்பிடித்தும் இருக்கிறார்கள்.

பெரிதாம் மெஸேஜ் எதுவும் இல்லை. அதே ச‌மய‌ம் விர‌ச‌மில்லாம‌ல், நன்றாக‌ பொழுதுபோக‌க் கூடிய‌ ஒரு ப‌ட‌ம். ந‌ண்ப‌ர்க‌ளோடு பார்க்க‌ சிறந்த‌ ப‌ட‌ம்

ஒரு நல்ல படத்தை தந்தமைக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும், தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கும் பாராட்டுகள்

சென்னை 600028
இந்த‌ ஏரியாவுக்கு எல்லாரும் ஒரு தபா விசிட் குடுக்க‌லாம்ப்பா

 

போய் வருகிறேன் பெங்களூரே ஜனவரி 25, 2007

கோப்பு வகை: Uncategorized — பிரேம்குமார் சண்முகமணி @ 10:25 மு.பகல்

இரண்டரை ஆண்டு பெங்களூர் வாழ்விற்கு பிறகு இதோ மீண்டும் சென்னை வந்தாயிற்று. இந்த இரண்டரை ஆண்டு காலம் என் தமிழ் ஆர்வத்தையும் வயிற்றையும் வளர்த்த பெங்களூருக்கு இப்பதிவு சமர்ப்பணம்

மனதையும் உடலையும்
சில்லிட வைக்கும் பெங்களூரே,

கனவும் கவிதைகளும்
தரும் அழகிகள்வாழ் பெண்களூரே,

பூக்காடுகள் தொலைத்து
கட்டடக்காடுகள் காணும் செங்களூரே,

போய் வருகிறேன்

பிறந்தகம் திரும்பும் உற்சாகம்
உள்ள போதிலும்
பிரிவின் வலி சற்றே
உள்ளத்தின் ஓரத்தில்!

முதன் முதலில் தெரியாத ஓர் ஊரில் வாழ்க்கை, புது வேலை, புது மனிதர்கள் என ஏகப்பட்ட அனுபவங்களை தந்தது பெங்களூர். போக போக பழகி போனாலும், கடைசி வரை ஏனோ பிடிப்பு வரவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், எப்போதும் மனதில் ஓர் நீங்காத இடம் பிடித்துவிட்டது பெங்களூர். அப்படி இப்பதியென்று இப்போது முழுக்க சென்னைவாசி ஆகிவிட்டேன்